
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன்போது அருகில் நின்றவரும் துப்பாக்கிச் சூட்டில் காயடமைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதை அடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்றிருந்தபோது, அங்கு கூடியிருந்த மக்கள் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒருவகை பதற்றம் நீடித்ததாகவும் அந்த சமயத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
பாதாள குழுவுடன் பொலிஸார் மோதல்
மாளிகாவத்தையில் இன்று அதிகாலை காவல்துறையினருக்கும் பாதாள உலக குழுவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சம்பவத்தில் காவல்துறையில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதாள உலக குழுவைச் சேந்த மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து வைத்தியசாலை பகுதியிலும் சம்பவம் இடம்பெற்ற மாளிகவத்தை பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment