
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொதுமக்கள் தமது தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியும் என்றும் இதனால், நாட்டின் நடைபெறுகின்ற விடயங்களை அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படும் என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொதுமக்களின் முறைப்பாடுகளை இணையங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அபராதங்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் செலுத்தும் முறை ஒன்றையும் இலங்கையின் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment