Monday, January 2, 2012

2011ஆம் ஆண்டின் ஈழத்தின் சிறந்த பாடலாசிரியர் போட்டி முடிவுகள் அறிவிப்பு


ஈழத்து பெண் கவிஞரான எஸ்.வீ.ஆர்.பாமினி 2011ஆம் ஆண்டின் ஈழத்தின் சிறந்த இளம் பாடலாசிரியருக்கான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை கலைஞர்கள் சங்கம் 2011 ஆம் ஆண்டின் ஈழத்தின் சிறந்த இளம் பாடலாசிரியர் யார்? என்ற கருத்து கணிப்பு ஒன்றினை அண்மையில் நடாத்தி உள்ளது.
இதில் ஈழத்தில் வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களான முல்லை நிசாந்தன், பொத்துவில் அஸ்மின் ,எஸ்.வீ.ஆர்.பாமினி, சதீஸ்காந் ,நெடுந்தீவு முகிலன், சாந்தரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.
இக்கருத்துக் கணிப்பில் அதி கூடிய வாக்குகள் வித்தியாசத்தில் கல்லறைப் பூக்கள், விடியலைக்காண, தியாகத்தின் மூச்சு என பல ஆல்பங்களில் பாடல்களை எழுதி தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்து வரும் ஈழத்து பெண் கவிஞரான எஸ்.வீ.ஆர்.பாமினி முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எங்கோ பிறந்தவள், காந்தள் பூக்கும் போன்ற பாடல்களை எழுதிய பொத்துவில் அஸ்மின் இரண்டாவது இடத்தையும், கண்ணீர் குறும்படதில் பாடலை எழுதியும் பல கவிதை நூல்களை வெளியிட்டுமுள்ள நெடுந்தீவு முகிலன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தாய் நிலத்தின் மண் வாசனையோடு ஈழத்திலும் புலத்திலும் மிகச் சிறந்த கவிப்பாடல்களை படைத்து வரும் இக் கவிஞர்களுக்கு தமிழ் உறவுகள் தம் நன்றியைத் தெரிவிப்பதுடன் இவர்களின் கவிப்பயணம் மேலும் தொடர வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment