Saturday, January 14, 2012

இலங்கையில் 27 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி பத்திரம்


இலங்கையில் இணையத்தளங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கமைய, ஊடகத்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்த 81 இணையங்களில் 27 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தமைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல முன்னிலையில் இடம்பெற்றது.
முன்னதாக 45 இணையத்தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நியைில், 27 இணையத்தளங்களுக்கே நேற்று அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. மிகவும் பிரபலமான இணையத்தளங்களுக்கு பெரும்பாலும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட தகவல் திணைக்களப் பணிப்பாளர் பி.பி.கணேகல,
"நேர்முகத்தேர்வுக்கு 81 இணையத்தள உரிமையாளர்கள் அழைக்கப்பட்டனர். இதில் 17 இணையத்தளங்கள் நேர்முகத் தேர்வுக்கு வரவில்லை. 13 விண்ணப்பங்களில் குறைபாடுகள் காணப்பட்டன.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 27 தளங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளங்கள் ஊடக ஒழுக்கக் கோவைக்கமைய செய்திகளை வெளியிட வேண்டும்� என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், www.jayasiriradio.com , www.onlanka.com , www.srilankasports.com , www.hothotlanka.com , www.lankabusinesstoday.com , www.tamilaa.com , www.srilankamirror.com , www.pawuraradio.com , www.lankasitizen.com , www.micsrilanka.org , www.kalasem , www.puvath.lk , www.tharunayaweb.lk , www.lankanews.lk , www.lankareporter.com , www.rangalivefm.com , www.lankika.net , www.siddioice.info , www.srilankapatriot.lk, www.nation.lk , www.lankaelink.com , www.lakfmradio.com , www.vfmradio.lk , www.karaitivu.org, www.sihasara.com , www.maruthamunaionline.com , www.news360.lk ஆகிய இணையத்தளங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment