Wednesday, January 4, 2012

ஆசியாவிலேயே மிக உயர்ந்த தொலைத்தொடர்புக் கோபுரம் கொழும்பில்! சீனா நிதியுதவி


ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமையவுள்ளது எனவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றையும் அதனுடன் இணைந்ததாக ஓய்வு நேர பூங்கா ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான நிதியுதவியனை சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
350 மீற்றர் உயரத்தை கொண்ட இக் கோபுரம் தாமரைக் கோபுரம் என அழைக்கப்படும். ஆசியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்புக் கோபுரமாக இது விளங்கவுள்ளது.
இதன்மூலம் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கோபுரமானது 50 தொலைக்காட்சி சேவைகளுக்கும், 50 ஒளிபரப்பு சேவைகளுக்கும் 10 தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 30 மாத காலத்தினுள் இக் கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment