Tuesday, January 3, 2012

மட்டு.வலையிறவு விமான நிலையம் விஸ்தரிப்பு! மாணவர்களுக்கு புதிய பாடசாலைக் கட்டடம்


மட்டக்களப்பு வலையிறவு பிரதேசத்தில் அமைந்துள்ள விமான நிலைய விஸ்தரிப்புக்காக, விமான நிலையம் அமைந்திருந்த காணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்த பாடசாலைக்கு பதிலாக புதிய பாடசாலையின் திறப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காணிக்குள்  உள்ளீர்க்கப்பட்ட வலையிறவு மெதடிஸ் தமிழ் கலவன் பாடசாலையானது தனது கல்வி நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த போதிலும், அதன் மூலம் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்த நிலையினை கவனத்தில் கொண்ட விமானப்படையினர் பாடசாலை அமைப்பதற்கென புதிய காணியொன்றை வழங்கியிருந்தனர்.

இதனடிப்படையில், கல்வித்திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலையின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.யோகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு விமானப்படையின் விங் கமாண்டர் டபிள்யு.எம்.பி.வேவகம, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் பவளகாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. கலாவதி பத்மராசா உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment