Friday, January 6, 2012

மேர்வின் சில்வா களனிக்கு வந்த பின்பே பாதாள உலகக்குழு உருவெடுத்தன: களனி பிரதேச சபையின் தலைவர்


போரில் வடக்கை மீட்டதைப் போன்று, களனி பிரதேசத்தை மீட்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின்னரே பாதாள உலகக் குழுக்கள் உருவெடுத்தன. கிரிபத்கொட சந்தையைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்பட்டது.
இதற்கு எதிராக குரல் கொடுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக களனி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார் என்று குறிப்பிட்டுள்ள பிரசன்ன ரனவீர எந்தவிதமான நீதிமன்ற அனுமதியும் இன்றி பொலிஸார் தமது வீடுகளை சோதனை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், களனி பிரதேசத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த முடியும் என பிரதேச சபை உறுப்பினர் லங்கா விஜேகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பினரிடமும் ஜனாதிபதி விளக்கம் கோரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாடுகள் குறித்து அமைச்சர் மேர்வின் சில்வாவும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment