Saturday, January 7, 2012

காணாமல் போன லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணை


கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே வி பி அதிருப்திக்குழுவின் இரண்டு உறுப்பினர்களான லலித்குமார் மற்றும் குகன் ஆகிய இரு தமிழர்கள் காணாமல் போனமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்க்கி தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த இரண்டு பேரும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த இரண்டு தமிழ் நடவடிக்கையாளர்கள் இலங்கை படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இந்தநிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.  அத்துடன் இந்த தருணத்தில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கருத்து என்ன என்றும் இன்னர் சிற்றி பிரஸ் வினவியது.
இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எதனையும் வழங்காத மார்டின் நெசர்க்கி, சற்று நேரத்தின் பின்னர் தமிழ் நடவடிக்கையாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பில்  அந்த சபை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment