
இன்று பகல் 1 மணியளவில் அப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள் இளவாலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸாரால் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிசு சிறிய பை ஒன்றில் பொதி செய்யப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகவும் குறைமாதத்தில் பிறந்த சிசுவாக இது இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது, சிசுவின் சடலம் இளவாளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment