Monday, January 9, 2012

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட வேண்டும்: ஜே.வி.பி.


நாட்டில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் இரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு முறைமை குறித்த மக்களின் அதிருப்தியை, அரசாங்கம் தேர்தல் சட்டதிருத்தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. உரிய ஜனநாயக முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றன. தேர்தல் சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்துவதன் மூலம் இதனை தடுத்து நிறுத்த முடியாது. எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலம் பறித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது என அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment