Tuesday, January 3, 2012

மட்டு.கல்லடியில் அனர்த்தங்களில் உதவும் படகின் இயந்திரங்கள் கொள்ளை! கண்டுபிடிப்போருக்கு 50 ஆயிரம் ரூபா: ஆச்சினோவா நிறுவனம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிலைகளில் உதவும் பொருட்டு, ஜேர்மன் நாட்டு நிறுவனம் வழங்கிய பல இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரப் படகுகளின் இயந்திரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இல. 13 சார்ள்ஸ் வேலுப்பிள்ளை வீதி, கல்லடியில் அமைந்திருக்கும் ஆச்சினோவா அரச சார்பற்ற நிறுவன வளாகத்திலிருந்தே இயந்திரப் படகுகளின் இயந்திரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அவசரகால நிலைகள் ஏற்படும் போது மக்களுக்கு உதவுவதற்கும் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் இந்தப் படகுகளை ஜேர்மன் நாட்டின் 'ஆச்சினோவா' என்ற அரசசார்பற்ற நிறுவனம் வழங்கியிருந்தது.
மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட இப்படகுகளின் இயந்திரங்கள் கொள்ளையிடப்பட்டது சம்பந்தமான தகவல்களைத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஆச்சினோவா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இது குறித்துத் தகவல் தெரிவிப்போருக்கு சன்மானமாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment