Thursday, June 18, 2015

யாழ்ப்பாணத்தில் உதயமாகும் யாழ் வங்கி !

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர்.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களே இவ்வாறு வங்கி ஆரம்பிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மக்களுக்கு தேவையான வியாபார மற்றும் அபிவிருத்திக் கடன்களை வழங்குவது இந்த வங்கியின் பிரதான நோக்கமாகும்.
இலங்கையின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வணிக வங்கியொன்று ஆரம்பிக்க 500 மில்லியன் பங்கு மூலதனம் இருக்க வேண்டும்.
வங்கிக்கு மத்திய வங்கி அனுமதியளித்தால் எதிர்வரும் மாதங்களில் வங்கியை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வித்தியா கொலையில் திடீர்த் திருப்பங்கள் - கொலையாளிகளுக்கு வாதிட சிங்கள சட்டத்தரணிகள் ஆயத்தம்?

இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் இவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் நீதிமன்றில் தெளிவுபடுத்தப்படவில்லை.
இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் சாதக பாதக நிலைமைகளை அவதானிப்பதற்காகவே வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் வித்தியா கொலை வழக்கில் அழையாமல் நுழைந்துள்ள இவ் மூன்று சட்டத்தரணிகள் குறித்து என்ன நோக்கத்திற்காக வருகை தந்துள்ளார்கள் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? அல்லது வித்தியா கொலை வழக்கை சட்டத்தரணி தவராசா அவர்களிடமிருந்து பரித்தெடுத்து வழக்கு விசாரணையை குழப்பும் நோக்குடன் வருகை தந்துள்ளார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வல்லைப் பகுதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் ஒருவர் மரணம் -


வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித் தள்ளி வீதியின் அருகில் இருந்த பனை மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டர் சைக்லில் பயணித்தவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். இதேவேளை குறித்த மோட்டர் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி ஒருவர் மந்திகை வைத்தியசாலையிலும் மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.