Monday, January 2, 2012

இலத்திரனியல் வீசா முறை புதுவருட தினத்தில் அமுல்! விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள்


வருகைக்கு பின்னர் வீசா வழங்கும் நடைமுறையை இலங்கை நேற்று புதுவருட தினத்திலேயே முடிவுறுத்தியது. அதற்கு பதிலாக, இலத்திரனியல் இணைய வீசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா இல்லாமல் இலங்கைக்கு வரும் பயணிகள் ஈ வீசாவை 50 அமெரிக்க டொலர்களை செலுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.
இதன்கீழ் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு வீசாவை பெற்றுக்கொள்வதற்கென விமானநிலையத்தில் இரண்டு கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அனைத்து நாடுகளுக்குமான ஈ வீசாக்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும், தென்னாசிய நாடுகளுக்கு 10அமெரிக்க  டொலர்களையும் அறவிடவுள்ளதாக குடிவரவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் வழமைபோலவே சிங்கப்பூர், மாலைதீவு போன்ற நாடுகளின் பயணிகள் வீசா இன்றியே நாட்டுக்குள் பிரவேசிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment