Thursday, January 19, 2012

ஜனவரி 25ம் திகதியை "கறுப்பு ஜனவரி"யாக பிரகடனம்


ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்றை ஒழுங்குசெய்து குரல் கொடுக்கும் நோக்கில் ஊடகங்களின் சம்மேளமானது ஜனவரி 25ம் திகதியை "கறுப்பு ஜனவரி"யாக பிரகடனப்படுத்தியுள்ளது.
இதவரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பனவற்றிற்கு இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே இந்த பிரகடனத்தை மேற்கொண்டதாக சுனின் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் லசந்த விக்கரமசிங்கவின் கொலை, பிரகீத் எக்னாலிகொடவின் கடத்தல், சிரச ஊடகம் மீதான தாக்குதல் போன்ற ஜனவரி மாதத்திலேயே இடம்பெற்றது எனவும் இதன்காரணமாகவே இந்த மாதம் 25ம் திகதியை கறுப்பு ஜனவரியாக பிரகடனப்படுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி எதிர்வரும் 25ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பி.ப 2.30மணியளவில் அனைத்து ஊடகங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment