
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சீனாவின் பிரதிப் பிரதமரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக கலையரங்கைத் திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




1288 ஆசனங்களைக் கொண்ட இந்தக் கலையரங்கம், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுடன், நவீன முறையில் மாற்றங்கள் செய்யக் கூடிய மேடை, நவீன தொழில்நுட்பத்திலான ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கலையரங்கம் 21,760 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உடைகள் மாற்றும் 13 அறைகள், சிற்றுண்டிச்சாலை, 306 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிட வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இந்தக் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம் திறந்துவைக்கப்படுவதை முன்னிட்டு ஹோர்டன் பிளேஸ் முதல் பொது நூலகம் வரையிலான வீதிக்கு ‘தாமரை தடாகம்’ வீதி (நெலும் பொக்குன) எனப் பெயரிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment