Wednesday, December 14, 2011

அரசாங்கத்தில்தான் மாற்றம் ஏற்பட வேண்டுமே தவிர எதிர்கட்சி பதவிகளில் அல்ல!- ரணில்


இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று புதன் கிழமை (14.12.2011)ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளதென தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐதேக தலைவர் ஆகியோருக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்க வேண்டி வருமென்றால் அது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்குமாறு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில்தான் மாற்றம் ஏற்பட வேண்டுமே தவிர எதிர்கட்சி பதவிகளில் அல்ல என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment