Thursday, December 15, 2011

மொரட்டுவ சிறுவர் இல்லத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை:நீதிமன்றம் தீர்ப்பு! அருட்சகோதரி விடுதலை


மொரட்டுவை,  ராவதாவத்தை சிறுவர் இல்லத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இரகசிய பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக சிறுவர் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ராவதாவத்தை சிறுவர் இல்லம்மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (15.12.2011) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இரகசிய பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமையவே விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும் இதன்படி, குறித்த சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் எவ்வித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடம்பெறவில்லை என்பது உறுதியானதாக பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்றம் ஊடாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வழக்குடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட அருட்சகோதரியை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார் என நீதிமன்றில் அறிக்கை சமர்பித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
 குறித்த அருட்சகோதரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இவோன் பெனாண்டோ உத்தரவிட்டார்.
அத்துடன், பொலிஸார் கைப்பற்றிய அருட்சகோதரியின் கடவுச் சீட்டை மீளளிக்குமாறும் சிறுவர் இல்லத்தில் இருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களையும் உரியவர்களிடன் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment