Saturday, December 10, 2011

இலங்கையுடன் கடலுக்கு அடியிலான மின்சார பரிமாற்றுத்திட்டத்திற்கு இந்தியா அழுத்தம்


          கடலுக்கடியிலான மின்சார பரிமாற்றத்திட்டம் தொடர்பில் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப ஆய்வு அறிக்கைகளையும் இந்தியா இலங்கையிடம் வழங்கியுள்ளதாகவும்  எனினும் இந்த திட்டத்தை அமுல்செய்வதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 



2014 ஆம் ஆண்டளவிலேயே கடலுக்கு அடியிலான இந்த திட்டத்தை அமுல்செய்யக்கூடியதாக இருக்கும். எனினும் இந்தியாவின் அனல் மின்சாரத்திட்டம் சம்பூரில் பூர்த்தியடையுமாக இருந்தால் அதன்மூலம் தேவையான மின்சார அலகுகளை பெறக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
எனவே, கடலுக்கு அடியிலான மின்சார பரிமாற்றத்திட்டதுக்கு அதிகளவு செலவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
எதிர்காலத்தில் இந்தியா சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுத்தால் இந்த திட்டம் இன்னும் இலங்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:

Post a Comment