Sunday, December 11, 2011

இலங்கை, இந்தியா, மாலைதீவுக்கான பயணிகள் கப்பல் சேவை

இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்பத்திட்ட அறிக்கையொன்று இலங்கையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையின் இணக்கப்பாடு கோரப்பட்டுள்ளதாக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் சாந்த வீர்க்கோன் குறிப்பிட்டார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பான சார்க் அமைப்பின் வழிகாட்டலின் கீழ், இந்த பயணிகள் கப்பல் சேவையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த முறை சார்க் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட தீரமானத்தின் பிரகாரம், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் முன்னெடுக்கப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இந்த சேவையின் மூலம் போதிய இலாபம் கிடைக்காமை காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.

No comments:

Post a Comment