
அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.
கட்சித் தலைவர் உட்பட முக்கிய பதவிகளுக்காக அண்மையில் சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஸ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் தயாசிறி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க தற்போது வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதனால், அவர் நாடு திரும்பியதன் பின்னர் விசாரணை நடத்தப்பட உள்ளது.
தயாசிறி ஜயசேகர மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமாக காணொளி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட ஒழுக்காற்று விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment