
யாழ்ப்பாணம் அத்தியடியைச் சேர்ந்த, பாக்கியராசா தனுஜன் என்ற 18 வயது மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறையை அடுத்து, யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை என பெற்றோர் தேடியுள்ளனர்.
எனினும், குறித்த மாணவன் கிடைக்கப் பெறாமையினால் இன்று(15.12.2011) யாழ். காவற்றுறையினரிடம் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment