
புத்தளம், கருவலகஸ்வெவ எனும் பகுயிதியில் வசிக்கும் 14 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டடிருந்த நிலையில், சிறுமிக்கு கிசிச்சை அளிக்கவென அச்சிறுமியின் வீட்டிலேயே தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
28 வயதுடைய நபர் ஒருவர் குறித்த சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாகக்கூறி பல தடவைகள் அவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, சிறுமியை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை நேற்று புதன்கிழமை(14.12.2011) கைது செய்துள்ளதுடன் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment