
37 வயதான சுதாகரன் சிவஞானமூர்த்தி என்பவரே இந்த சாதனை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த இலங்கை தமிழர் கம்பி ஒன்றில் தமது தலைமுடியை இணைத்துக்கொண்டு நிலத்தில் கால் பதிக்காமல் 23 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குயின்ஸ்லேன்ட்டில் படைக்கப்பட்டது. 57 கிலோ கிராம் நிறையை கொண்ட இவர் யோகா மற்றும் தியானம் மூலமே தம்மால் இந்த சாதனையை ஏற்படுத்த முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாதனையை ஏற்படுத்த தாம் கடந்த 27 வருடங்களாக பயிற்சிகளை மேற்கொண்டதாக சுதாகரன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment