
இலங்கையின் ஊடக முதன்மையாளர்களை நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஏஎப்பி செய்திசேவை தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு, பரந்துப்பட்ட நிலையில் நல்லிணக்கம் தொடர்பான பரிந்துரைகளை செய்துள்ளது. எனினும் அமெரிக்கா மாத்திரம் போரின் இறுதிக்கட்ட நாட்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்கள் மீது படையினர் திட்டமிட்டு தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்கா மாத்திரம் போரின் இறுதிக்கட்ட நாட்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையானது கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் தற்போது பல நாடுகளும் தமது கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment