
தங்கள் மீதான குற்றச்சாட்டை இவர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்னவினால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1641.1 கிராம் மற்றும் 279.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்ப்பட்டு இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அஸிஸ் ராஹீம், ஹாஷ்ஹிஸ் முகமட் ஆகிய பாகிஸ்தானியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தியமை, வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment