
அண்மையில் இலங்கையின் அழைப்பு ஏற்று அவுஸ்திரேலிய நாடாளுமன்ற குழு ஒன்று அங்கு பயணம் செய்திருந்தது. இக் குழுவிற்கு தலைமை வகித்த அவுஸ்திரேலிய தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Maria Vamvakinou இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இன்னும் நல்லிணக்கத்துக்கான அடிப்படைகளை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்று பலரும் கருத்துரைத்துள்ளனர். எனவே நல்லிணக்கத்துக்காக அங்கு நீண்ட வழிமுறைகள் அவசியமாகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்தின் கவனத்தை நன்கு உணர்ந்துள்ளனர். எனினும், நல்லிணக்கத்துக்கான பேச்சுவார்த்தைகளின் போது இரண்டு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம் சுமத்தும் அடிப்படைகளை இன்னும் கைவிடவில்லை. எனவே தெளிவான ஒரு சமாதான நடைமுறைக்கான நகர்வை இன்னும் இலங்கையில் காணமுடியவில்லை என்றும் Maria Vamvakinou தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment