![]() |
வரவுசெலவுத்திட்ட உரையை சமர்ப்பித்து 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் உரையாற்றிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்க தனது விசேட நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.55 மணிக்கு 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மகிந்த உரையாற்றினார். இடையில் ஏற்பட்ட குழப்பநிலை மோதல்களைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வெளிநடப்பு செய்தது. ஆனால் ஏனைய எதிர்க்கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக தேசியக் கூட்டணியும் இறுதிவரை அமைதியாக அமர்ந்திருந்தது. ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தன.
இதனாலேயே தனது வரவுசெலவுத் திட்ட உரையை நிறைவு செய்யும் போது தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைக் குறிப்பிட்ட ஜனாதிபதி எனது உரையை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் மகிந்த சிந்தனை உரை என்றால் கேட்கமாட்டார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது பொறுப்பை உணர்ந்து மிகவும் அமைதியாகத் தொடக்கம் முதல் இறுதிவரை எனது பேச்சை செவிமடுத்ததற்காக அவர்களுக்கு எனது விசேட நன்றியை தெரிவிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment