
அண்மையில் தென்னிலங்கையின் தங்காலை ஹோட்டலில் வைத்து கொல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜை தொடர்பிலேயே சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
32 வயதான Khuram Shaikh கடந்த 25 ஆம் திகதி தங்காலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளமை மற்றும் அவருடன் தங்கியிருந்த அவருடைய தோழியான 23 வயதான ரஸ்யாவின் Victoria Alexandrovna காயங்களுக்குள்ளானமை தொடர்பாகவே சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் Khuram Shaikh பாலஸ்தீன காஸா பிரதேசத்தில 2010 ஆம் ஆண்டு பௌதீக புனரமைப்பு பிரிவின் முகாமையாளராக செயலாற்றி வந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் இலங்கையில் வைத்து கொலை செய்யப்பட்டமை கவலையை தருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment