Friday, December 16, 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த அறிக்கையை முன்வைத்துள்ளார்.
மொழிபெயர்ப்பு பணிகள் தாமதமாகும் காரணத்தினால் அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இன்று திடீரென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான விடயங்களும், பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், விதந்துரைகள்
வேதனைகளை மறந்து எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுப்போம்.
சிவில் குடில்களை இலக்கு வைத்து வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை.
ஆணொருவர் வரம்பு மீறியிருந்தால் விசாரணைக்குட்படுத்த வேண்டும்
காணொளி காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சட்ட, மருத்துவ பிரச்சினைகள் நிலவுகின்றன.
தவறிழைத்தமை நிரூபணமானால் சட்ட ரீதியாகத் தண்டனை வழங்கப்படும்.
உசிதமான வேளைகளில் மரண அத்தாட்சிப்பத்திரம், நிவாரணங்கள்.
சனத்தொகை நிலைமையை மாற்றியமைக்கும் கொள்கை உண்மைக்குப் புறம்பானது.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகளின் அளவு குறைந்துள்ளது.
வடக்கு கிழக்கு காணிகளைக் கையாள தேசிய காணி ஆணைக்குழு.
நாடு முழுவதும் படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர்.
அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்குத் தடை.
காணொளி காட்சிகள் தொடர்பில் சுயாதீனமான புலனாய்வு விசாரணை நடத்தவும்.
சிறு இனக்குழுக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்றத் தெரிவுக்குழு.
இனப்பிரச்சினைகளுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்துவதற்கு மும்மொழிக் கொள்கை

No comments:

Post a Comment