
குறித்த வாகனங்கள் பதிவு செய்யப்படாமை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனங்கள் செலுத்தப்பட்டமை ஆகிய காரணங்களுக்காக கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரிடம் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் வாகனங்களை மீட்க முயற்சித்த போதும், அது கைகூடவில்லை என்றும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது சாரதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகன அனுமதி பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்திய சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment