Friday, December 16, 2011

யாழில் காணாமல் போன சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் சம்பந்தமில்லை: மஹிந்த ஹத்துருசிங்க


யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் இருவர் காணாமல் போன சம்பவத்துடன் இராணுவத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்துடன் இராணுவத்திற்கு தொடர்பு இருப்பதாக நாம் இலங்கையர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தகுந்த ஆதாரங்களுடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் போதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச சமூகத்திடம் அனுதாபம் திரட்டும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் இலங்கையர் அமைப்பின் அமைப்பாளர் உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பத்து பேருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் வடக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் உதுல் பிரமத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment