
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
ஊடக ஒத்துழைப்பு மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகள் தொடர்பிலான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.
மேலும், பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் பாரூக் ஹமீடை ஜனாதிபதி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிகழ்வுகளில் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜயலத் வீரக்கொடியும் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment