எரிபொருளின் விலை அதிகரிப்புச் சுமையைக் குறைக்க அரசாங்கத்தால் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் மானியத்திற்கு நீர்கொழும்பு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, இன்றைய தினம் முதல் நீர்கொழும்பு எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீர்கொழும்பு மீனவர்கள் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 81 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என நீர்கொழும்பு கடற்கரைத்தெரு ஐக்கிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சிலாபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கவுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று மாலையில் மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தீர்மானிக்கப்படும் இரு நாட்களில் கடற்றொழிலுக்குச் செல்லாமல் துக்க தினம் அனுஷ்டிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.குருநகர் மீனவர்களும் மானிய முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாக குருநகர் மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment