Thursday, February 9, 2012

மின்சார சபையில் எமக்கு நிரந்தர நியமனம் வழங்குங்கள்; மனித வலு நிறுவன ஊழியர்கள்

news
மனித வலு நிறுவனத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகுதி அடிப்படையில் விரைவில் நியமனம் பெற்றுத் தரப்படும் என மின் சக்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறிய வாக்குறுதியில் நம்பிக்கை இல்லை என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 9 மணிக்கு ஈ. யூ. லங்கா போரத்தினுடைய முதலாவது ஆண்டு பூர்த்தி கந்தர் மடத்திலுள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையில் வைபவ ரீதியாக நடைபெற்றது. அதன் போதே இக் கோரிர்கை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் பணிபுரிகின்ற 60 இக்கும் மேற்பட்ட நிரந்தர நியமனம் அற்ற ஊழியர்கள் மனித வலு நிறுவனம் ஊடாக மின்சார சபையில் பணிபுரிகின்றனர்.

இதனடிப்படையிலேயே இவர்களுக்கு மின்சார  சபையில் நிரந்தர நியமனம் பெற்று தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் உறுதிமொழியைத் தொடர்ந்து குறித்த ஊழியரிடம் கேட்டபோது:-
நாம் இதுவரை பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆனாலம் பதில் எதுவுமோ அல்லது தீர்வுகளோ கிடைக்கவில்லை. எமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தர வேண்டும். எங்களில் 5 வருடங்களுக்கு குறையாமல் பணிபரிந்தவர்களும் உள்ளனர்.

நாங்கள் இவ்வாறு பல தடைவைகள் கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை. அதுபோலவே அமைச்சரின் உறுதி மொழியும் உள்ளது.  இந்த உறுதிமொழியில் எமக்கு நம்பிக்கை இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment