
அத்துடன், வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படும் உடல்களை மறுநாள் எலிகள் தின்றிருப்பதுடன் எந்தவித வசதியுமின்றியே அது இயங்கி வருவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜனாதிபதியின் வருகையையொட்டி பாழடைந்த வைத்தியசாலையில் சமையல் கூடம் வர்ணப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாழடைந்த சமையல் கட்டடம் திருத்தப்படாமலேயே வடமாகாண சுகாதார அமைச்சினால் 40 லட்சம் ரூபா நிதி செலவிட்டு, வர்ணப் பூச்சுக்களுக்கும் அலங்காரத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை விட, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு 2 மில்லியன் ரூபா செலவில் இரத்தப் பரிசோதனை செய்யக் கூடிய இயந்திரம் ஒன்று கடந்த மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது. இயந்திரம் திரும்பவும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் வைத்திய சாலையில் மருந்துகள் இல்லாத நிலையில் இவ்வாறு ஜனாதிபதியின் வருகைக்கு மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்படுவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment