யாழ்ப்பாணம், சுழிபுரம், பத்திரகாளி கோவிலடி பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயராசா ஜெயக்குமார் என்னும் இளம் குடும்பஸ்தரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதற்காக குறித்த குடும்பஸ்தர், முகவர் ஒருவரிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், அதன் பின்னர் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்வதற்கு தயாராகி வந்ததாகவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே இன்று அதிகாலையில் குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுழிபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment