Thursday, February 9, 2012

வடக்கில் 11 தொழிற்சாலைகளில் மூன்று மட்டுமே இயங்குகின்றன; போர் காரணமாகவே செயல் இழந்தன

news
 வடமாகாணத்தில் அரசின் நிர்வாகத்தில் இயங்கிய 11 தொழிற்சாலைகளில் யுத்தத்தின் பின்னர் 3 தொழிற்சாலைகள் மட்டுமே சிறிய அளவில் இயங்கி வருகின்றன. 
யுத்த காலத்துக்கு முன்னர் வடபகுதியில் அரச நிர்வாகத்தின் கீழ் பெரிய அளவான தொழிற்சாலைகள் இயங்கிவந்தன. 
 
இதில் யாழ். மாவட்டத்தில் ஐந்து தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. காங்கேசன்துறையில் லங்கா சிமெந்துத் தொழிற்சாலை, அச்சுவேலியிலுள்ள கைத்தொழில் பேட்டை, திக்கத்திலுள்ள பனம் பொருள் வடிசாலை, காரைநகரிலுள்ள படகு உற்பத்தி நிலையம், குருநகரிலுள்ள வலை உற்பத்தித் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.
 
இவற்றில் திக்கம் வடிசாலை, காரைநகர் படகுத் தொழிற்சாலை, குருநகர் வலை உற்பத்தித் தொழிற்சாலை ஆகியன தற்போது இயங்கிவருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை ஆகியன இயங்கிவந்தன. இவை இரண்டும் இன்னமும் இயங்க ஆரம்பிக்கவில்லை.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை சிறியளவில் இயங்கிவருகிறது.மன்னார் மாவட்டத்தில் பேசாலை கடல் உணவு பொதியிடும் தொழிற்சாலை மற்றும் ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை ஆகிய இரண்டு தொழிற்சாலைகளும் இயங்கிவந்தன.வவுனியாவிலுள்ள பூந்தோட்டத்தில் கைத்தொழிற்சாலையும் பூங்கா தொழிற்சாலையும் இயங்கிவந்தன. இவை இன்னமும் இயங்க ஆரம்பிக்கவில்லை.

No comments:

Post a Comment