Friday, February 3, 2012

யாழில் விசேட ரோந்து நடவடிக்கை

news
 யாழில் அதிகரித்துள்ள திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ்.காவற்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் புதிய திட்டமொன்றை அமுலாக்கியள்ளனர்.
 
இதுதொடர்பாக யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவிக்கையில்.
யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இரவு வேளைகளில் வீதிரோந்தில் ஈடுபட்டு மக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.
 
பெரிதளவான திருட்டு சம்பவங்கள் தொடக்கம் சிறியளவானதிருட்டுக்கள் உட்பட ஜனவரி மாதத்தில் மட்டும் 86 முறைப் பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 யாழில் இரவு நேரங்களில் சமுகவிரோத செயல்கள் பெருமளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment