Thursday, February 9, 2012

பாகிஸ்தான் செல்லவுள்ளார் மஹிந்த

news





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாளை பாகிஸ்தானுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரியின் அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் மஹிந்த
12ம் திகதி வரையில் தங்கியிருப்பார் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியல், பாதுகாப்பு, கலாசாரம், உல்லாசப் பயணத்துறை, ஊடகத்துறை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியன தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment