
சென்னையில் நடைபெறும் தோல்பொருள் கண்காட்சியில் இலங்கை நிறுவனம் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத் தப்பட்ட போராட்டத்தில் அங்கு ஏற்றப் பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
சென்னை, நந்தம்பாக்கம் வணிக நிலையத்தில் அனைத்துலகத் தோல்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக் கோரியும் நேற்றுக் காலை 10 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு நந்தம்பாக்கம் வணிக நிலையத்தை நோக்கிச் சென்றனர். அரங்கினுள் நுழைந்த சிலர் அங்கு ஏற்றப்பட்டிருந்த இலங்கைக் கொடியை இறக்கி அதனை தீயிட்டுக் கொளுத்தினர். இதையடுத்துப் பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
No comments:
Post a Comment