
இந்த நிலையில் இவ்வாறு தனியார் போக்குவரத்து பேரூந்துகள் சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வேளையில், சேவையில் ஈடுப்பட்டிருந்த ஏனைய பேரூந்துகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு இன்றைய தினம் சேவையில் ஈடுப்பட்ட பேரூந்துகள் மீது தாக்குதல் மேற்கொண்ட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவ்வாறான சம்பவங்கள் பாணந்துறை, நாரஹென்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள இந்த போராட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment