
இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவை,1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறுத்தப்பட்டது. அதேநேரம் தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவையும் பொருளாதார மற்றும் சட்டப்பிரச்சினை காரணமாக கடந்த ஜூனில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவையை புதியவர்களை கொண்டு இயக்க இலங்கை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமிழ்நாட்டு அரசாங்கம் புதிய துறைமுகக் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் வரை, இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் சேவைகளை ஆரம்பிக்க முடியாதிருக்கும் என்று இந்திய கப்பல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தமிழக அதிகாரிகள் இலங்கையுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தவேண்டும் என்றும் இந்திய கப்பல்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதேவேளை சேது சமுத்திர திட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்கும், இந்தக்கப்பல் சேவை தாமததிற்கான மற்றுமொரு காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment