
நேற்று முன்தினம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட, தாவடியைச் சேர்ந்த முத்துச்சாமி ஆனந்தராசா (49 வயது) என்பவரே இவ்வாறுசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தரினால் சுன்னாகம் பொலிஸாருக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இடத்திற்கு சென்ற பொலிஸார் மலசல கூடத்திலிருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இவர், மன நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனது உறவினர்களுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment