புகையிரத திணைக்கள ஊழியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றும் செயற்பாடுகளுக்கு ஆட்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என இலங்கை புகையிரத ஊழியர்கள் பொதுச் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை புகையிரத திணைக்களத்தினால் தொழிற்சங்க நடவடிக்கைகள் யாவும் திடீரென நிறுத்தப்பட்டு பணிப்புறக்கணிப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் காரணமாக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த எட்டு வருடங்களாக புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் எந்தவித தீர்வையும் முன்வைக்காமல் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது. என புகையிரத ஊழியர்கள் பொதுச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலை தொடருமாக இருந்தால் அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அச் சங்கம் எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment