
சிறிய ரக வானூர்திகள், கமெராக்கள் மற்றும் அவற்றுக்கான பாகங்கள் போன்றவற்றுக்கு தனித்தனியாக தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் தடை தளர்த்தப்பட்டதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.
இந்த ஏற்றுமதி தடை 1980ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
No comments:
Post a Comment