Friday, March 9, 2012

சாவகச்சேரியில் மூன்று இராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை! தனிப்பட்ட பகையினால் சகவீரரே சுட்டுள்ளார்!


யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பகுதியில் மூன்று இராணுவப் படைவீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ முருகன் கோயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உயிரிழந்த படைவீரர்களின் பெயர் விபரங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது (இரண்டாம் இணைப்பு)
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்றதென இராணுவம் அறிவித்துள்ளது.
நள்ளிரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவப் படைவீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையினால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் ஒருவர், சக படைவீரர்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிஹால் அப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய படைவீரரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த படைவீரர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment