Friday, March 2, 2012

பரபரப்பான ஆட்டத்தில் போராடித் தோற்றது அவுஸ்திரேலியா; இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது சிறிலங்கா

news
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சி.பி கிண்ண முக்கோணக் கிரிக்கெட் தொடரின் பரப்பரப்பான முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டியில் இறுதிவரை போராடிய அவுஸ்திரேலியா 9 ஓட்டங்களால் சிறிலங்காவிடம் தோற்றது.

முன்னதாக நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிறிலங்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ஆடிய அவ் அணி நிர்னயிக்கப்பட்ட ஐம்பது பந்துப் பரிமாற்றங்களில் 10 இலக்குகளை இழந்து 238 ஒட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 49.1 பந்துப்பரிமாற்றத்தில் அனைத்து இலக்குகளையும் இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதனால் அவுஸ்திரேலியா 9 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

சிறிலங்கா அணி இப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

சிறிலங்கா அணியின் சார்பில் தினேஷ் சந்திமல் 75 ஓட்டங்களையும், குமார் சங்ககார 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

No comments:

Post a Comment