Friday, March 2, 2012

ஜெனிவா மனித உரிமைப் பிரேரனை அரசுக்கு எதிரானதே மக்களுக்கு எதிரானதல்ல; கூறுகிறார் லால்காந்த

news
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் இந்த அரசாங்கத்திற்கு எதிரானதே தவிர இலங்கை மக்களுக்கு எதிரானதல்ல என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு மேற்குலக நாடுகளால் தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அவ் அழுத்தங்களை மக்கள் மீது பிரயோகிக்கப் பார்க்கிறது அரசாங்கம். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுக்கு எதிராக ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் அதற்காக குரல் கொடுக்கத் தயாராகவே உள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதனால் எரிபொருள், பாண் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என மக்களை அரசாங்கம் கோரியுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் அண்மையில் விலை உயர்த்தப்பட்ட எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினை குறைக்க வேண்டும் எனவும் கோரி  எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் பகிரங்க அழைப்பு ஒன்றையும் லால்காந்த விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment