உலகப் பல்கலைக்கழக தமிழ் இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை 6ம் திகதி சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை ஏற்பாடு செய்துள்ள இம் மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
இம்மாநாடானது, உலககெங்குமுள்ள தமிழ் சந்ததியைச் சேர்ந்த இளையோர்கள், 21ம் நூற்றாண்டில் தமது இனத்துவ அடையாளத்தை பேணும் விதம் குறித்து கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்களை நடத்துவதற்கான ஒரு முயற்சி என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் நிறைவேற்றுக்குழு தெரிவித்துள்ளது.
'தமிழ் இளையோர் அடையாளத்தை கற்பனைசெய்தல்' எனும் தொனிப்பொருளில் உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இளையோர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான களத்தை இம்மாநாடு வழங்கும்.
தமது கட்டுரையின் சுருக்கத்தை சிங்கப்பூர் நேரப்படி 2012 மார்ச் 5 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு உலககெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இளையோர்களை அப்பேரவை கோரியுள்ளது.

No comments:
Post a Comment