நமது கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க வரலாற்றைக் கொண்ட யாழ் நல்லுார் மந்திரிமனை கவனிப்பார் இல்லாத நிலையில் காணப்படுகின்றது.
நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டிடம் இன்றும் பாடசாலை மாணவர்களினால் பார்வையிடப்பட்டு வருகின்றது.
இந்தக் கட்டிடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனை தனியார் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகின்ற நடவடிக்கையும் காணப்படுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடை பெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டு அந்தக் குழுவும் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு பதவிகளைபெற்று தனது கடமையை செய்யாது கைவிட்டு மாநகரசபையின காலமும் முடிவடையவுள்ளது.
ஆனாலும் கூட வட மாகதாண சபை இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் கூட காணப்படுகின்றது.
தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அரசு திட்டமிட்டு அழித்து வருவதாக சுறுவதிலும் பார்க்க இருக்கும் தமிழர்களின் அடையாளங்களையாவது பாதுகாக்க வட மாகாண சபை முன் வரவேண்டும் என பலரும் தெரிவிக்கின்றார்கள்.



No comments:
Post a Comment